குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை
பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாகுளம், குப்புசாமிநாயுடுபுரம் (ஒரு பகுதி), பருவாயி (ஒரு பகுதி).