கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி. இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், ஹன்ஷினியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.