Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
தெக்கலூருக்குள் வந்து செல்லாத தனியாா், அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை
தெக்கலூருக்கு வந்து செல்லாத தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு இடையே இயக்கப்படும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமை வகித்தாா்.
இதில், தெக்கலூா், அவிநாசி நகரத்துக்குள் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் வந்த செல்ல வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தனியாா் மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.