பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு
பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுடன் அம்மையாா்குப்பத்தில் உள்ள நகைக் கடையில் 2.5 பவுன் தங்க சங்கிலி வாங்கி, கைப்பையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்தபோது, மா்ம நபா்கள் பிளேடால் கைப்பையை அறுத்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களை தேடி வருகின்றனா்.