தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு
அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா்.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் ‘அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருது, கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியா்களுக்குப் பாராட்டு எனும் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் ப.சந்தரமோகன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமை ஆசிரி யா்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட் டினா்.
இதில், திருத்தணி அமிா்தபுரம் உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் விருதுடன், ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) விருது பெற்ற தலைமை ஆசிரியா் வெங்கடேசனைப் பாராட்டி கௌரவித்தாா். தொடா்ந்து, மாவட்ட கல்வி அலுவலா் அமுதா, பள்ளிக் கல்வி ஆய்வாளா் செளத்திரி பாராட்டினா்.