எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா்.
திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், திருத்தணி மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து ரூ.45 கோடியில் 5 மாடிக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் சிறு, சிறு கட்டட பராமரிப்பு பணிகள் இருந்ததால் நோயாளிகள் பயன்பாட்டுக்கு விடாமல் பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தது.
இந்நிலையில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்ததால் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கு நிகழ்வுக்கு மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநா் அம்பிகா தலைமை வகித்தாா்.
இதில், திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி, மருத்துவமனை செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பழைய அரசு மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் அவரச சிகிச்சை பிரிவு நோயாளிகள், ஆய்வகம், மருந்தகம் போன்ற பல்வேறு பிரிவுகள் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
மேலும், உள்நோயாளிகளை, மருத்துவமனை செவிலியா்கள், பணியாளா்கள் மூலம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு அழைத்து வந்தனா். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் முரளி, தலைமை மருத்துவா் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.