செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்பாலானோர் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவம் பட்டாலியன் எண்.1 இல் தீவிரமாக உள்ளவர்கள். இது மாவோயிஸ்ட்களின் வலிமையான ராணுவ அமைப்பாகக் கருதப்படுவதாக அதிகாரி கூறினார்.
சரணடைந்தவர்களின் ஒன்பது பெண்கள் ஆவார். லோகேஷ் என்கிற போடியம் பீமா (35), ரமேஷ் என்கிற கல்மு கேசா (23), கவாசி மாசா (35), மட்கம் ஹங்கா (23), நுப்போ கங்கி (28), புனேம் தேவே (30), பராஸ்கி பாண்டே (22), மத்வி ஜோகா (20), நுப்போ லச்சு (25), பொடியம் சுக்ராம் (24) மற்றும் துதி பீமா ஆகியோருக்கு தலா ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
லோகேஷ் பிரதேச குழு உறுப்பினராக இருந்தார், மேலும் எட்டு பேர் பிஎல்ஜிஏ பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
மற்ற நால்வருக்கு தலா ரூ.5 லட்சமும், ஒருவருக்கு ரூ.3 லட்சமும், 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
சரணடைந்த நக்சலைட்டுகளில் சிலர் மாவோயிஸ்ட்களின் ஆம்தாய், ஜாகர்குண்டா மற்றும் கெர்லபால் பகுதி குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது, மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை(ஜூலை 11)ல் அபுஜ்மத் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த 22 நக்சல்கல் ரூ.37.5 லட்சம் வெகுமதியுடன் நாராயண்பூர் மாவட்டத்தில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.