காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர் வேறு நாடுகளில் சந்தித்துப் பேச உள்ளனர்.
ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் தியான்ஜினில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் தலைநகர் பீஜிங் சென்று அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சமீபத்தில் சீனாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அங்குச் செல்லவுள்ளார்.
2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளான நிலையில், கடந்த 5 ஆண்களில் ஜெய்சங்கரின் முதல் சீன வருகை இதுவாகும்.