செய்திகள் :

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

post image

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்றைய அரசியலில் வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர். கையில் மைக்கை வைத்துக் கொண்டு, வெள்ளைச் சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால், அவர்களும் தலைவர்கள் ஆகிவிடுகின்றனர். ஆனால், இதே தமிழகத்தில்தான் காமராஜர், கக்கன் போன்றோரும் தலைவர்கள் இருந்தனர்.

நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் உங்களுக்குள் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களின் பதவி ஒன்றும் உங்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்காது; உங்களின் செயல்களே தீர்மானிக்கும். எந்தப் பதவியானாலும். ஒருநாள் இல்லாமல்தான் போகும். அதுதான் இயல்பு. தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கான பதவியே உங்களைத் தேடி வரும்.

அதிகாரத்துக்கு வந்ததும் தன்னை அவமதித்தவர்களைக்கூட பழிவாங்கும் எண்ணாமல் இருப்பவர்தான் சிறந்த தலைவராக வருவார் என்று பிரதமர் மோடி கூறுவார். அதிகாரத்துக்கு வந்தவுடன், அவமதித்தவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்பது, பழிவாங்குவது போன்றவற்றைச் செய்தல் கூடாது. ஓர் அரசியல்வாதிக்கு பழிவாங்கும் போக்கு இருக்கலாம்; ஆனால், ஒரு தலைவனுக்கு அது இருத்தல் கூடவே கூடாது.

இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் எதனையும் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு கட்சித் தலைவர் மாடுகளின் முன்பாக பேசுகிறார். மாடுகளெல்லாம் வாக்குரிமை கேட்கிறதா? இன்னொருவர் மரம் ஏறுகிறார் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

BJP Leader Annamalai slams new politicians who wish to become to power in fast track

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க