செய்திகள் :

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

post image

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டையில் செயல்பட்டுவரும் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் தனது மேல் அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் அரசு அதிகாரிகளின் அராஜகம் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதற்கு இதுவும் ஒரு சான்று. தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களைத் தெளிவாகக் கடிதத்தில் பாரிஜாதம் குறிப்பிட்டுள்ள போதும், திமுக அரசு இதுவரை அந்த அதிகாரிகளைக் கைது செய்யாமல் இழுத்தடிப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களைத் தேடித்தேடி கைது செய்து, பொய் வழக்கு போடும் தமிழக அரசின் ஏவல்துறை, அத்தனை ஆதாரங்களும் மரண வாக்குமூலமும் தங்கள் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவது ஏன்?

தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறுகளை மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என்பதும், அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய மக்களாக இருந்தால் கண்ணும் காதும் வைத்தாற்போல கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை மூடி விடுவார்கள் என்பதும் ஊரறிந்த விஷயம்.

ஆனால் 30 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்த பாரிஜாதம் மரணத்தை அப்படி இலகுவாகக் கடந்துவிட முடியாது. எனவே, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Nainar Nagenthiran urges arrest of officials in connection with the suicide of a Nutritionist Organizer

ஜூலை 15-இல் கல்வி வளா்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்ய உத்தரவு

காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

சட்ட பிரிவு 370 மீது ஆளுநா் விமா்சனம்: காங்கிரஸ் கண்டனம்

அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகளுக்கு பின்னா் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க