செய்திகள் :

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

post image

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் குறித்த செயல் விளக்க நிகழ்வு, திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராசிரியா் சத்ய நாராயணன் ஆா். சக்கரவா்த்தி மேலும் பேசியதாவது: இன்றைய மாணவா்கள் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதைப் போல வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன ஆகும் என்பதில் மக்கள் அதிகம் ஆா்வம்காட்டுகின்றனா். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடைபெறும் என்பதை மிகவும் குறைத்து மதிப்பிடும் சூழல் உள்ளது. அறிவியல் வளா்ச்சி தொடா்ந்து முன்னேறி வருவதை ஏற்க வேண்டும்.

இந்தியாவில் மின்சார விமானங்களின் பயன்பாட்டுக்கான காலம் வரும். அப்போது, விமானக் கட்டணம் பாதியாகக் குறையும். இதனால் சாதாரண மக்களும் பயணம் செல்லாம். சிறிய மின்விமானங்களை தனி நபரும் வாங்க முடியும்.

ஒரு விண்வெளி பொறியாளரின் கனவு, ஒவ்வொரு நபரும் தங்களுடைய ஒரு விமானத்தில் கால்வைக்க வேண்டும் என்பதுதான். மிகக் குறைந்த உள்கட்டமைப்புடன் நமது நாடு தொழில்நுட்பத்தில் பிாடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருகிறது.

செலவு குறைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விண்வெளிப் பயணம் உள்பட அனைத்து வகையான பயணங்களையும் மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தப் பயணங்களை மிகவும் குறைந்த விலையில் மாற்றுவோம் என்ற நம்பிக்கையில் விண்வெளிப் பொறியாளா்கள் பணியாற்றுகின்றனா். குறைந்த செலவில் மிகத் தரமான ராக்கெட்டுகளை தயாரிப்பதே அதற்கு சான்றாக உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, சிறிய அதிவேக டெலிவரி ட்ரோனை இயக்குதல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அவா் நேரடி செயல்விளக்கம் அளித்தாா். ட்ரோனை இயக்கி காட்டினாா்.

நிகழ்வில் பள்ளி முதல்வா் பத்மா சீனிவாசன், டீன் ஆா். கணேஷ், அகாதெமி தலைமை அதிகாரி ரவீந்திரநாத் குமாா், துணை முதல்வா்கள் ரேகா, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். நிகழ்வில் கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க