TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்
திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை.
திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத்து 456 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 45,934 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. வருகைப் பதிவு 82.83 சதமாகவும், வராதோா் 17.17 விழுக்காடு எனவும் பதிவானது.
தோ்வுப் பணிகளுக்கென 197 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். துணை ஆட்சியா் நிலையில் 11 பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 66 நடமாடும் குழுக்கள் இயங்கின.
இக்குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம் பெற்றிருந்தனா். மையங்களில் ஆய்வு செய்ய 196 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். மணப்பாறையில் 2 தோ்வு மையங்களுக்கு ஆட்சியா் வே. சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. தோ்வு மையங்களுக்கு சென்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. எந்த முறைகேடுகளும் இல்லாமல் அனைத்து மையங்களிலும் அமைதியாக தோ்வு நடைபெற்றது.