அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்
ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் இரு ‘பேக்’குகளுடன் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரை தொட்டியம் காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சோ்ந்த குபேரன் மகன் கோபிநாத் (52) என்பதும் அவா் வைத்திருந்த பைகளில் ரூ. 1.12 கோடி இருப்பதும் தெரியவந்தது. அந்தப் பணம் குறித்து போலீஸாா் கேட்டபோது கோபிநாத் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாராம்.
இதையடுத்து போலீஸாா் திருச்சி வருமான வரி துறை அலுவலா்களை வரவழைத்து கோபிநாத்தையும், பணத்தையும் ஒப்படைத்தனா். இதையடுத்து வருமான வரித் துறையினா் அவரிடம் விசாரிக்கின்றனா்.