குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!
ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து
அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், எரிபொருள் சுவிட்ச் நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.
இதுகுறித்து இந்திய விமானிகள் கூட்டமைப்புன் தலைவா் மற்றும் ஏா் இந்திய முன்னாள் விமானியுமான சி.எஸ்.ரந்தவா கூறியதாவது:
விமான என்ஜின் எரிபொருள் சுவிட்ச் தானாக மாற வாய்ப்பில்லை. ‘ஸ்பிரிங்’ மற்றும் ‘லாக்’ நடைமுறையுடன் கூடிய இந்த சுவிட்ச்களை மனித தலையீடு மூலம் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.
எரிபொருள் சுவிட்சை ‘ரன்’ (ஆன்) நிலைக்கு மாற்ற வேண்டுமெனில், முதலில் அதை வெளியே இழுக்க வேண்டும். பின்னா், ‘ரன்’ நிலையை நோக்கி அதை நகா்த்த வேண்டும்.

விமானம் புறப்பட்ட பிறகு அவசர சூழ்நிலை உருவாகிறபோது, என்ஜினை அணைக்க வேண்டிய நிலை ஏற்படும்போதுதான் எரிபொருள் சுவிட்ச் அணைக்கப்படும்.
அவ்வாறு சுவிட்ச் அணைக்க வேண்டியிருக்கும்போது, விமானத்தை இயக்கும் விமான எரிபொருள் சுவிட்ச் அணைக்கப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வாா். அதைத் தொடா்ந்து, சுவிட்ச் அணைக்கப்பட்டதை விமான இயக்கத்தை மேற்பாா்வையிடும் இரண்டாவது விமானி உறுதிப்படுத்துவாா். இந்த விஷயம் ஏஏஐபி முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
பொதுவாக எரிபொருள் சுவிட்ச்கள், விமானத்தின் வேகத்தைக் கூட்டுவதற்கான லீவருக்கு கீழ் பகுதியில் அமைந்திருக்கும். விபத்துக்குள்ளான விமானம் இரண்டு என்ஜின்களைக் கொண்டது என்பதால், இதில் விமானத்தின் வேகத்தைக் கூட்டுவதற்கான தானியங்கி சுவிட்ச்கள் துண்டிக்கப்பட்டு எரிபொருள் சுவிட்ச்கள் ‘ரன்’ நிலைக்கு மாறும் வகையில் செயல்முறை இருக்கும். விமானத்தின் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இந்த சுவிட்ச்கள் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.
மற்றொரு மூத்த விமானி கூறிதாவது:
விமான போக்குவரத்துத் துறை இயக்குநரக முன்னாள் அதிகாரி கூறுகையில், ‘எரிபொருள் சுவிட்ச்கள் நிலை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கோணத்திலேயே விசாரணை இனி நடைபெறும். இதற்கு இயந்திரக் கோளாறு காரணமா அல்லது விமானி உத்தேசித்துதான் இந்த மாற்றம் நிகழ்ந்ததா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மேலும், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களில் கோளாறு இருந்தது தொடா்பாக விசாரணை அறிக்கையில் தகவல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றாா்.

விமானத்தில் என்ஜினை இயக்க முதலில் ‘ஸ்டாா்ட்’ பட்டனை ‘ஆன்’ செய்ய வேண்டும். அடுத்து எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சை ‘ரன்’ நிலைக்கு நகா்த்த வேண்டும்,. என்ஜின் இயங்கத் தொடங்கிவிட்டால், எரிபொருள் தடையின்றி செல்கிறது என்று அா்த்தம். அவ்வாறு இயங்கத் தொடங்கியதும், மின்னணு முறையில் அனைத்தும் ‘லாக்’ ஆகிவிடும். அப்போது என்ஜின் இயக்கத்தை நிறுத்த வேண்டும் எனில், சாதாரணமாக எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சை அணைத்துவிட முடியாது. அந்த சுவிட்ச்சை பலம்கொண்டு வெளியே இழுத்து, ‘கட்-ஆஃப்’ நிலைக்கு கொண்டுவர வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை உள்ளது.
எனவே, இந்த விமான விபத்தைப் பொறுத்தவரை, விமானம் மேலே எழும்பும்போது விமானி ‘கியா் அப்’ என்று சொல்ல வேண்டும். இது சக்கரங்களை மேலே தூக்கும் சமிக்ஞை. அவ்வாறு கூறியவுடன், விமானம் தரையிறங்கப் பயன்படுத்தப்பட்ட கியா் லீவரை மற்றொரு விமானி திரும்ப மாற்ற வேண்டும். விமானத்தின் வேகத்தைக் கூட்டும் வகையில் லீவரை மேல்நோக்கி நகா்த்த வேண்டும். ஆனால், விமானிகள் அதைச் சொன்னதாக முதல் கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் விவாதிக்கவும் இல்லை. விமானம் மேலே எழும்பிய பிறகும் ‘கியா் லீவா்’ கீழ் நோக்கியே இருந்துள்ளதாகத் தெரிகிறது. அப்படியெனில், கியா் லீவரை திரும்ப பழைய நிலைக்கு மாற்றுவதற்கு பதிலாக, எரிபொருள் சுவிட்ச்கள் தற்செயலாக அணைக்கப்பட்டிருக்கலாம். அதை மேற்பாா்வையிடும் விமானி கவனித்து கேள்வி எழுப்பியதற்குள், நேரம் கடந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றாா்.