தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்
TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆதவ் அர்ஜுனா
சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, "ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின்போது அன்றைய முதல்வர் சிபிஐக்கு வழக்கை மாற்றியபோது ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடியைப் பதவி விலகச் சொன்னார்.
இப்போது ஏன் நீங்கள் சிபிஐக்கு வழக்கை மாற்றினீர்கள். அஜித்குமாரின் அம்மாவிடன் Sorry எனச் சொன்னது தேர்தல் நேர டிராமா.
காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எங்களின் தலைவரைச் சந்தித்தபோது இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
ஜெய்பீம் படத்தைப் பார்த்து அழுதீர்கள் என்றீர்கள். உண்மையைப் பார்த்துதான் நீங்கள் அழுவதில்லையே.

17 வயது பையன் லாக்கப் டெத்தால் இறந்தபோது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தீர்கள். அதன் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை.
காவல்துறையை நிர்வகிக்கும் முதல்வர் மக்களுக்குப் பதில் சொல்லவில்லையெனில், தலைவர் தமிழகம் முழுவதும் சென்று போராடுவார்' என்று பேசியுள்ளார்.