பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
கடைசி 7 இன்னிங்ஸில் 6-இல் டக் அவுட்டான பும்ரா..!
இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 2018 முதல் ஜஸ்பிரீத் பும்ரா (வயது 31) விளையாடி வருகிறார்.
வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இதுவரை 47 போட்டிகளில் 215 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் அசத்தும் பும்ரா ஃபீல்டிங், பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது போடியில் டக் அவுட்டானார். கிரிக்கெட்டில் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழப்பதை இப்படிச் சொல்லுவார்கள்.
கடைசி 7 இன்னிங்ஸில் 6-இல் டக் அவுட்டாகியுள்ளார். இந்த அளவுக்கு மோசமான சாதனை யாருமே நிகழ்த்தியதில்லை.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் (43 முறை) ஆனவர் என்ற பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் வால்ஷ் இருக்கிறார். அவர் 147 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
உலக அளவில் இந்தப் பட்டியலில் 10-ஆவது இடமும் இந்தியர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்தில் பௌலர்கள் ரன்களை குவிக்கும் நிலையில் இந்திய அணியின் லோயர் ஆர்டர் மிக மோசமாக விளையாடுகிறார்கள்.