செய்திகள் :

மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ

post image

மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கடை உரிமையாளர் ஒருவர் மராத்தியில் பேசவில்லை என மகாராஷ்டிர நவநிர்மான் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கும் விடியோ கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில், மராத்தி மொழியை தவறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநர் மீதும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், மொழியை வைத்து உருவாகும் மோதல் மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குடிபெயர்ந்துள்ளார். அவர், மராத்தி குறித்தும் மராத்தி தலைவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சிவசேனை கட்சியினர் அவரை கன்னத்தில் சரமாரியாக அறைகின்றனர். பின்னர், பொதுவெளியில் இதற்காக மன்னிப்பு கோரவும் வலியுறுத்துகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ''சிவசேனை நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கும் விடியோவை் பார்த்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. அதனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

உத்தவ் பிரிவைச் சேர்ந்த சிவசேனை கட்சியின் நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''மொழியை அவதூறாகப் பேசிய ஆட்டோ ஓட்டுநருக்கு தகுந்த பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் மராத்தி மொழியையோ, மராத்தி தலைவர்களையோ, மகாராஷ்டிரத்தையோ தவறாகப் பேசினால், சிவசேனையின் பாணியில் பதிலடி கொடுக்கப்படும்'' எனக் கூறினார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தாணே பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி மொழியைப் பேசவில்லை எனக் கூறி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை கட்சியின் உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர். இச்சம்பவத்தைக் கண்டித்து கடையின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டு வாரங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது மொழிப் பதற்றத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

Auto-rickshaw driver thrashed by Sena workers over 'anti-Marathi' remarks ; video goes viral

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தை... மேலும் பார்க்க

மராத்திக்கு எதிராக பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் மீது சரமாரி தாக்குதல்!

மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் மராத்தி மொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, வெளிமாநில ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீது சிவசேனை (உத்தவ்) கட்சியினா் சரமாரி தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் மன்னிப்புக் ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை: ஆண்டறிக்கையில் தகவல்

பிரபல தொழிலதிபா் அனில் அகா்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ... மேலும் பார்க்க

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை!

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறி... மேலும் பார்க்க

கால்களை இழந்தாலும் சித்தாந்தத்தை கைவிடாதவர்! பாஜக எம்பிக்கு பிரதமர் புகழாரம்!

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி.... மேலும் பார்க்க

4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞா் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவா் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளா் மீனாக்ஷி ஜெய... மேலும் பார்க்க