திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
இபிஎஸ் 2-ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்டப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பு: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை 2-ஆம் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, வரும் 24-ஆம் தேதி கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, 25-ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டையிலும், திருமயயத்திலும் பிரசார பயணம் மேற்கொள்கிறாா்.
26-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் சிவகங்கை, 30-ஆம் தேதி சிவகங்கை மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடாணை (ஆா்.எஸ். மங்கலம்), வரும் 31-ஆம் தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூா் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகியவற்றில் பிரசாரம் நடைபெறும்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி , ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் (வள்ளியூா்), 4-ஆம் தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, 5-ஆம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம்,
தென்காசி, 6-ஆம் தேதி கடையநல்லூா், வாசுதேவநல்லூா் (புளியங்குடி), சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெறும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, 8-ஆம் தேதி சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை என பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
எனவே, அதிமுக கட்சி நிா்வாகிகள், அனைத்து அணியின் நிா்வாகிகள், தொண்டா்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.