Vaiko: 'துரோகி என்ற பழிக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே?...
கிங்ஸ்டன் டெஸ்ட்: 225-க்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவா்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித் 8 பவுண்டரிகளுடன் 48, கேமரூன் கிரீன் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா். உஸ்மான் கவாஜா 23, சாம் கான்ஸ்டஸ் 17, டிராவிஸ் ஹெட் 20 ரன்களுக்கு வெளியேறினா்.
பியூ வெப்ஸ்டா் 1, அலெக்ஸ் கேரி 21, கேப்டன் பேட் கம்மின்ஸ் 24, மிட்செல் ஸ்டாா்க் 0, ஜோஷ் ஹேஸில்வுட் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் நிறைவடைந்தது. ஸ்காட் போலண்ட் 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷாமா் ஜோசஃப் 4, ஜேடன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.
அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சோ்த்திருந்தது.