செய்திகள் :

Vaiko: 'துரோகி என்ற பழிக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே?'- மல்லை சத்யா வேதனை

post image

வைகோவின் மதிமுகவில் உட்கட்சிப் பிரச்னைகள் பேசுபொருளாகியிருக்கும் சூழலில், வைகோ தன்னை துரோகி எனக் கூறியதற்கு மல்லை சத்யா மனம் வெதும்பி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.

வைகோ
வைகோ

நான் காரணமில்லை

மல்லை சத்யா எழுதியிருப்பதின் முக்கிய அம்சங்கள், 'கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணமில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு துரோகம் இழைத்த மாத்தையாவுடன் என்னை ஒப்பிட்டு வைகோ பேசியிருக்கிறார்.

சான்றோர் பெருமக்களே நான் மாத்தையா போன்ற துரோகியா? நீதி சொல்லுங்கள். என் அரசியல் வாழ்வில் வைகோவுக்கு எதிராக நான் பேசியிருந்தேன், செயல்பட்டிருந்தேன் என்றால் இளங்கோ அடிகளாரின் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற நீதி நின்று என்னை சுட்டெரிக்கட்டும்.

துரை வைகோவின் அரசியலுக்காக...

தனது மகன் துரை வைகோவின் அரசியலுக்காக 32 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையோடு உண்மையாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகி என்கிற பழியை சுமத்துகிறார்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

அன்றிலிருந்து இன்று வரை என்னால் தூங்க முடியவில்லை. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு அவர் வேறு ஏதாவது குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் குடிக்க சொல்லியிருந்தால் செத்துப் போயிருப்பேனே. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

’திமுக எம்.பி கல்யாணசுந்தரத்தின் மா.செ பதவி பறிப்பு’ - தொடர் சர்ச்சை காரணமா? பின்னணி என்ன?!

திமுக-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம். இவர் ராஜ்ய சபா எம்.பியாகவும் இருக்கிறார். கல்யாணசுந்தரம் பெயர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடிப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பொ... மேலும் பார்க்க

``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் பெய்த கனமழையால், மாண்டி தொகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தொகுத... மேலும் பார்க்க

OPS : 'NDA விலிருந்து விலகல் - விஜய்யோடு கூட்டணி?' - ட்விஸ்ட் கொடுக்கும் ஓ.பி.எஸ்!

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்ஓ.பி.எஸ்'தனிக்கட்சியா?'ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ... மேலும் பார்க்க

'2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்!' - எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.அந்தவகையில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.... மேலும் பார்க்க

``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க