செய்திகள் :

OPS : 'NDA விலிருந்து விலகல் - விஜய்யோடு கூட்டணி?' - ட்விஸ்ட் கொடுக்கும் ஓ.பி.எஸ்!

post image

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

'தனிக்கட்சியா?'

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். தனிக்கட்சி ஆரம்பிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, 'எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் எங்கள் உயிர்நாடி.' என்றார்.

'NDA விலிருந்து விலகல்!'

.

NDA கூட்டணியில் இன்னமும் இருக்கிறீர்களா எனும் கேள்விக்கு, 'சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கிறது. எதிர்காலத்தில் முடிவெடுப்போம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கும்.' என்றார்.

எடப்பாடி பழனிசாமியை இன்று விமர்சிக்கவே இல்லையே எனும் கேள்விக்கு, 'எடப்பாடி விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சிப்போம்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் வருத்தத்தில் இருக்கின்றனர். இன்றைய ஆட்சி அவலமாக இருக்கிறோம். அந்த ஆட்சியை போக்க ஒன்றிணைய வேண்டும்.

அதிமுகவில் இணைய நான் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ' என்றவர் மேலும், 'மதுரை மாநாட்டுக்கு சசிகலாவையும் தினகரனையும் நிச்சயம் அழைப்போம்.' என்றார்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

விஜய்யின் அரசியல் நகர்வு பற்றிய கேள்விக்கு, 'விஜய்யுடைய அரசியல் நகர்வு இன்று வரை நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவருடைய நகர்வைப் பொறுத்து எங்களுடைய தார்மீக ஆதரவு அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.' என பொடி வைத்துப் பேசினார்.

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய க... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க

'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்க... மேலும் பார்க்க

The Hunt: 'ராஜீவுக்குப் பிறகு 'ஜெ'வை கொல்ல சதி... ஏன் இந்த வன்மம்?' - வன்னி அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ்.புலனாய்வு பத்த... மேலும் பார்க்க

’திமுக எம்.பி கல்யாணசுந்தரத்தின் மா.செ பதவி பறிப்பு’ - தொடர் சர்ச்சை காரணமா? பின்னணி என்ன?!

திமுக-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம். இவர் ராஜ்ய சபா எம்.பியாகவும் இருக்கிறார். கல்யாணசுந்தரம் பெயர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடிப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாவட்ட செயலாளர் பொ... மேலும் பார்க்க

``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் பெய்த கனமழையால், மாண்டி தொகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தொகுத... மேலும் பார்க்க