செய்திகள் :

தென் கொரியாவில் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு: 17 மாதங்களாக நீடித்த மாணவர் போராட்டம் வாபஸ்!

post image

சியோல்: தென் கொரியாவில் கடந்த 17 மாதங்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தென் கொரிய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள யூன் சுக் இயோல் அதிபராகப் பதவி வகித்தபோது, மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கப்போவதாக கடந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தார். இதனால் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும், அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எதிர்காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேவை அதிகரிக்கும் என்பதால் மருத்துவ இடங்கள் அதிகரிப்பதாக அதிபர் மாளிகை தரப்பிலிருந்து கூறப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிராக மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஓரணியில் திரண்டனர். அவர்கள் அதிபரின் புதிய உத்தரவை திரும்பப்பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவம் பயிலும் மாணவர்களுடன் கைகோத்து சுமார் 12,000 இளநிலை மருத்துவர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கொரிய சுகாதாரத் துறையில் அதன் தாக்கம் பெரியளவில் எதிரொலித்தது.

தென் கொரியாவின் புதிய அதிபராக லீ ஜே மியூங் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜூனில் பதவியேற்றுக் கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்திருந்ததொரு வாக்குறுதியில் மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு உரிய தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த உத்தரவை அமல்படுத்தப் போவதில்லை என்று தென் கொரிய அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதையடுத்து சுமார் 8,300 மருத்துவ மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பி தங்கள் படிப்பைத் தொடரப் போவதாக கொரிய மருத்துவ சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை(ஜூலை 14) தெரிவித்தார். மாணவர்களின் இந்த முடிவை அந்நாட்டின் பிரதமர் கிம் மின் சியோக் வரவேற்றுள்ளார்.

18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?

18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரச... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.திங்கள்கிழமை காலை, இந்தோனேசியாவின் தனிம்பா... மேலும் பார்க்க

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க