செய்திகள் :

இரவில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

There is a chance of rain in 19 districts in Tamil Nadu, including Chennai, for the next 3 hours.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

தமிழகத்தில் 33 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர... மேலும் பார்க்க

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு சாகும்வரை சிறை! பெண்ணுக்கு ரூ.1 கோடி நிவாரணம்!!

ஓடும் ரயிலில், காட்பாடி அருகே கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம்... மேலும் பார்க்க

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க