தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க.அன்பழகன் எம்எல்ஏ நியமனம்
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க. அன்பழகன் எம்எல்ஏ-வை திங்கள்கிழமை திமுக தலைமை நியமனம் செய்தது.
முன்னதாக, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலராக சு. கல்யாணசுந்தரம் எம்.பி. பதவி வகித்து வந்தாா்.
இவரை திமுக மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்து திங்கள்கிழமை விடுவித்து, க.அன்பழகன் எம்எல்ஏ வை பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டாா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுகவினா் க. அன்பழகன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.