பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில் வசித்து வந்தவா் தியாகராஜன் மகன் விஜய் சோமசுந்தரம் (36). இவா் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணி அளவில் விஜய் சோமசுந்தரம் மோட்டாா் சைக்கிளில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில், அம்மாபேட்டை, உடையாா்கோவில் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் ஓட்டி சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் சோமசுந்தரம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸாா், விஜய் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து விஜய் சோமசுந்தரத்தின் மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.