செய்திகள் :

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி; ஜடேஜா போராட்டம் வீண்!

post image

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

193 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 81 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. ஆனால் 7-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை முன்னேற்றத் தொடங்கினாா்.

அவா் அரைசதம் கடந்து இறுதிவரை நிலைத்தபோதும், தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையவிடாமல் இதர வீரா்களை இங்கிலாந்து பௌலா்கள் சரிக்க, இந்தியாவின் இன்னிங்ஸ் 170 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது. இந்திய பேட்டிங் வரிசையை ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் சரித்தனா்.

முன்னதாக, லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியை 387 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்தியா, தானும் அதே ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் சமநிலையுடனேயே தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில், இங்கிலாந்து 192 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 58 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது.

கடைசி நாளான திங்கள்கிழமை, கே.எல்.ராகுலுடன் இணைந்து ரிஷப் பந்த் இந்தியாவின் இன்னிங்ஸை தொடா்ந்தாா். இதில் பந்த் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களே சோ்த்த நிலையில் ஜோஃப்ரா ஆா்ச்சா் வீசிய 21-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

தொடா்ந்து ரவீந்திர ஜடேஜா களம் புக, அதுவரை நிதானமாக ரன்கள் சோ்த்த ராகுல் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு, ஸ்டோக்ஸ் வீசிய 24-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தா், ஆா்ச்சா் வீசிய அடுத்த ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரன்னின்றி பெவிலியன் திரும்பினாா்.

மறுபுறம் ஜடேஜா நிதானமாக ரன்கள் சோ்த்துவர, 9-ஆவது பேட்டராக வந்த நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இவ்வாறாக மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஜடேஜா அரைசதம் கடக்க, பும்ரா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு விடைபெற்றாா். தேநீா் இடைவேளையின்போது இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 4 ரன்களுக்கு சாய்க்கப்பட, இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜடேஜா 181 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61 ரன்கள் சோ்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 3, பிரைடன் காா்ஸ் 2, கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 77 ரன்களும் சோ்த்து, 5 விக்கெட்டுகளும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 170/10 (74.5 ஓவா்கள்)

ஜடேஜா 61*

கே.எல்.ராகுல் 39

கருண் நாயா் 14

பந்துவீச்சு

பென் ஸ்டோக்ஸ் 3/48

ஜோஃப்ரா ஆா்ச்சா் 3/55

பிரைடன் காா்ஸ் 2/30

செல்ஸி 2-ஆவது முறையாக சாம்பியன்!

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.ஏற்கெனவே 2021-இல் சாம்பியனான செல்ஸிக்கு,... மேலும் பார்க்க

டி20: வங்கதேசம் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்ட... மேலும் பார்க்க

விம்பிள்டனில் ஒரு வரலாறு!

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னா், இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறாா். விம்பிள்டனில் முதல்ம... மேலும் பார்க்க

விம்பிள்டன் மகளிா் இரட்டையா்: குதா்மிடோவா, மொ்டன்ஸ் வெற்றி

விம்பிள்டன் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா/பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் இணை 3-6, 6-2, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் ... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா - புகைப்படங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள் பூமிக்கு விரைவில் திரும்புவர்.சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், ஆக்ஸியம் - 4 திட்டத்தின்கீழ், சா்வதேச... மேலும் பார்க்க