எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!
சிதம்பரம் அரசுப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை
சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம் சென்றிருக்கும் முதல்வர்
தமிழ்நாட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.
இதற்காக, முதல்வா் மு.க. ஸ்டாலலின் சென்னையிலிருந்து இராமேஸ்வரம் விரைவு ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு வந்தடைந்தார். சிதம்பரத்தில் தனியார் விடுதியில் முதல்வர் தங்கியிருந்தார்.
இன்று காலை காலை 9 மணியளவில், காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினா் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.