திருமணத்துக்குப் பிறகு கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடிய பாவனி!
கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!
சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீன் மூலம் வெளியே வந்தார்.
உள்ளூர் பகுதிகளில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் எனக் கருதிய நீதிமன்றம் வெளியூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி முதல் மதன்குமார் காலை - மாலை என இரு வேளைகளும் கையெழுத்துப் போட வந்து சென்று உள்ளார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கையெழுத்துப் போட வந்த மதன்குமார், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது சேலம் மணக்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.