காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!
காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னை பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Vijay pays tribute to Kamaraj statue
இதையும் படிக்க :தேர்வர்கள் கவனிக்க..! குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!