செய்திகள் :

'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

post image

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

அந்தப் புகாரில், 'கடந்த 10 ஆம் தேதி 11 மணியிலிருந்து 11:30 க்குள் ஒரு ஆட்டோவில் சந்தேகத்துக்குரிய வகையில் ஆயுதங்களுடன் 5 பேர் எங்களின் அலுவலக வாசலில் முகாமிட்டிருந்தனர். அதில் இரண்டு பேர் அலுவலகத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்களெல்லாம் யார் என கேள்வி எழுப்பிய போது முறையான பதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது. அதே ஆட்டோ மீண்டும் ஒரு 3 நபர்களோடு மதியம் 1 மணியிலிருந்து 1:30 க்குள் எங்கள் அலுவலகத்தை சுற்றிக்கொண்டே இருந்தது. மீண்டும் 3 மணியிலிருந்து 3:20 க்குள் 8 நபர்களுடன் அதே ஆட்டோ எங்களின் அலுவலகத்தைச் சுற்றி வந்தது. இதையெல்லாம் அருகிலிருந்து ஒரு பெண்ணும் கவனித்து உறுதிப்படுத்தினார்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

இடையில் 1 மணியிலிருந்து 1:30 க்குள் திமுக கொடி கட்டிய ஒரு இன்னோவா கார் எங்கள் அலுவலகம் இருக்கும் சாலைக்குள் எந்தக் காரணமும் இல்லாமல் வந்து சென்றிருக்கிறது. இதெல்லாம் அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதையே உணர்த்துகிறது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.' என அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக... மேலும் பார்க்க

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

"மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆர்.பி. உதயகுமார்இது குறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை ... மேலும் பார்க்க

Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ - மல்லை சத்யா வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரை... மேலும் பார்க்க

"கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றவர் மூலம் ஆய்வறிக்கை தயாரிப்பா?" - சு.வெங்கடேசன்

"கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல்..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.... மேலும் பார்க்க