பிங்க் பந்து நிபுணர் மிட்செல் ஸ்டார்க்! இமாலய சாதனை!
பிங்க் பந்து போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இமாலய இலக்கை அடைந்துள்ளார்.
பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் ஆஸி. 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
3 போட்டிகள் கொண்ட தொடரிலும் அசத்திய ஸ்டார் தொடர் நாயகன் விருதும் வென்றார்.
பிங்க் பந்து கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் 14 போட்டிகளில் 81 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தப் போட்டிகளில் 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
பிங்க் பந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
1. மிட்செல் ஸ்டார்க் - 81
2. பாட் கம்மின்ஸ் - 43
3. நாதன் லயன் - 43
4. ஜோஷ் ஜேசில்வுட் - 40
5. ஜிம்மி ஆண்டர்சன் - 24
6. ஸ்டீவர்ட் பிராட் - 23