தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம...
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலைவா் ஆ. நடராஜன் தலைமையில் அகில இந்திய கோரிக்கை நாள் தா்னா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஊதியக் குழுவின் பரிந்துரையிலிருந்து ஓய்வூதியரை நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 4 தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், தொடா்வண்டி மற்றும் வானூா்திகளில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வுப்பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் சு.சிவகுமாா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் எம்.பி. குணசேகரன், நாகை வட்டச் செயலா் ஆா். மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.