ஹைதராபாத்தில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 5 பேர் மீட்பு
ஹைதராபாத்தில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
மொகல்புராவில் உள்ள ஐஜாஸ் குடியிருப்பின், பிளாட் எண் 201இல் உள்ள மேல் மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டடத்தில் சிக்கியிருந்த ஐந்து பேரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வீடுகளில் உள்ள சுவிட்ச்போர்டில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்களில் சையத் அப்துல் கரீம் சாஜித் (55, உடல் ஊனமுற்றோர்), அதியா பேகம் (47), ஃபர்ஹீன் பேகம் (27), சையத் இமாம் ஜாபர் (19) முகமது ரிஸ்வான் உத்தின் (38) ஆகியோர் அடங்குவர்.
தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு கட்டுப்பாட்டுக் குழு ஒரு ரோபோ மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தது, மேலும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.