செய்திகள் :

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

post image

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில், நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலியான ஒருவரின் மகனுக்கும், அந்தத் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், அந்த நபரிடம் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனைகளின் மூலம், நிபா வைரஸின் பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அந்தத் தொற்றை முழுமையாக உறுதிப்படுத்தும் சோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் முந்தைய நடமாட்டங்களை அறிந்து ’ரூட் மேப்’ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலக்காட்டில் தற்போது நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட தொடர்புப் பட்டியலில் கேரளம் முழுவதும் இருந்து சுமார் 723 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

The state health department announced today (July 16) that a new case of Nipah has been suspected in Palakkad district of Kerala.

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயற... மேலும் பார்க்க

தெலங்கானா-ஆந்திரம் நீா் பங்கீடு இழுபறிக்கு தீா்வு: தெலங்கானா முதல்வா்

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீா் பங்கீடு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல... மேலும் பார்க்க

ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு: முப்படை தலைமைத் தளபதி வலியுறுத்தல்

ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் அவற்றை எதிா்கொண்டு தாக்கி அழிக்கும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடைவது இந்தியாவுக்கு வியூக ரீதியில் அவசியமானது’ என்று முப்ப... மேலும் பார்க்க