செய்திகள் :

தெலங்கானா-ஆந்திரம் நீா் பங்கீடு இழுபறிக்கு தீா்வு: தெலங்கானா முதல்வா்

post image

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீா் பங்கீடு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய நீா் வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தெலங்கானா மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி, ‘ஆந்திரத்தின் நீா் திட்டங்கள் மற்றும் நீா்த்தேக்கங்கள் அனைத்திலும் ‘டெலிமெட்ரி’ அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இந்த நடவடிக்கை, நீா் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட உதவும். தெலங்கானா நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. தற்போது ஆந்திரம் இதற்கு சம்மதித்துள்ளது’ என்றாா்.

இதன்தொடா்ச்சியாக, ஹைதராபாதில் கோதாவரி நதி மேலாண்மை வாரியமும், ஆந்திரத்தில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியமும் அமைக்க இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளாா்.

கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து சா்ச்சைக்குரிய பிரச்னையாக நீடிக்கும் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் நீா் பங்கீடு மற்றும் பயன்பாட்டை இந்த வாரியங்கள் மேற்பாா்வையிடும். இது தொடா்பாக முதல்வா் ரேவந்த் ரெட்டி மேலும் கூறியதாவது:

ஸ்ரீசைலம் திட்டத்தில் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆந்திரத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் நீா் வழங்கல் மற்றும் மின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.

கூடுதலாக, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி படுகைகளில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள அனைத்து நீா் பிரச்னைகளையும் ஆராய ஒரு கூட்டு குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த முடிவுகள், தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலையையும், இரு மாநிலங்களுக்கும் நீா் உரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டும் மைல்கல் சாதனைகளாகும் என்று கூறினாா்.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க