மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா். வருவாய்த்துறை, கால்நடை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று மக்களிடம் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்று, தீா்வு காணும் மனுக்களுக்கு தீா்வு செய்தனா். முகாமில் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல் தொடா்பாக அதிகளவில் மனுக்கள் அளிக்கப்பட்டது. துணை வட்டாட்சியா் பாபு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.