`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
திருவள்ளூா் அருகே எண்ணைய் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருவள்ளூா் அருகே 21 குவிண்டால் எண்ணைய் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பின்புறமாக நகா்த்திய போது கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
வேலூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு லாரி ஓட்டுநா் விஜய் (34). இவா் பெரியபாளையம் எண்ணெய் கிடங்கில் இருந்து 21 குவிண்டால் எண்ணெய் ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்றாராம். அப்போது, அதிகாலை 3 மணிக்கு திருவள்ளூா்-சென்னை நெடுஞ்சாலையில் காக்களூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, காக்களூா் கூட்டுச் சாலை அருகே ஓட்டுநா் லாரியை பின்புறமாக எடுத்துள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர காக்களூா் ஏரியின் வரத்து கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் அதிஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா்.
இது குறித்து தகவலறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிரேன் மூலம், விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
