செய்திகள் :

6 முறை எம்எல்ஏ; மத்திய அமைச்சர்; கோவாவின் புதிய கவர்னர்.. எளிமையாக வாழும் `அசோக் கஜபதி ராஜு' யார்?

post image

சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்களை நியமித்திருந்தார்.

இதில், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் குறித்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

அசோக் கஜபதி ராஜு
அசோக் கஜபதி ராஜு

அசோக் கஜபதி ராஜு விஜயநகர பேரரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் எந்த ஆடம்பரமும் இல்லாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவரது தந்தை பி.வி.ஜி.ராஜு, தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்.

1982-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அசோக் கஜபதி ராஜு 6 முறை  எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேல் தெலுங்கு தேசத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தன் அலுவலக வாயிலில், 'அரசு பணி தவிர, மற்றவற்றுக்கு அனுமதி இல்லை' என்ற பலகையும் அவர் வைத்திருந்திருக்கிறார். 

அந்தளவுக்கு நேர்மையை கடைப்பிடிப்பவர். அவர் அமைச்சராக இருந்த போது, அசோக் கஜபதி ராஜுவின் மகள் ஹைதராபாத்துக்கு வெளியே மருத்துவம் படித்திருக்கிறார்.

அசோக் கஜபதி ராஜு
அசோக் கஜபதி ராஜு

அப்போது கல்லுாரிக்கு தினமும் அரசு பஸ்சில் சென்று வந்திருக்கிறார். கடந்த 2014 - 19 வரை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக அசோக் கஜபதி ராஜு பதவி வகித்திருக்கிறார்.

அந்த கால கட்டத்தில், அமைச்சருக்குரிய எந்த சிறப்பு சலுகையும் அவர் பயன்படுத்தியதில்லை.  ரயில் நிலையங்களில் சாதாரண நபர் போல, பயணியருக்கான இருக்கையில் அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Divorcee camp: ``விவாகரத்தான பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த முகாம்..'' - கேரளப் பெண் சொல்வதென்ன?

விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட முடிவாக இல்லாமல் சமூகம் சார்ந்து இருக்கிறது. விவாகரத்து பெறும் பெண்களுக்காக ஒரு முகாமை உருவாக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறார் ரஃபியா அஃபி.பிரேக்கப் ஸ்டோரி என்ற... மேலும் பார்க்க

`love is in the Air': பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்; வைரல் வீடியோ!

விமான ஆர்வலரும் பிரபல இன்ஃப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீ... மேலும் பார்க்க

Divorce: ``விடுதலையாகி விட்டேன்" - 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்.. வைரலான வீடியோ

``இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்," என 40 லிட்டர் பாலில் ஒருவர் குளித்த வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோ தொடர்பாக வெளியான தகவலில், ``அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரியில் உள்ள பரலியாபர் க... மேலும் பார்க்க

Assam: "இன்று முதல் எனக்கு விடுதலை" - மனைவியிடமிருந்து விவாகரத்து; 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது.இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, அந்த வீடி... மேலும் பார்க்க

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அ... மேலும் பார்க்க

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உ... மேலும் பார்க்க