கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
`love is in the Air': பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்; வைரல் வீடியோ!
விமான ஆர்வலரும் பிரபல இன்ஃப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, திருமண உடையில் மணமக்கள் விமானம் ஏறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் மணமக்கள் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.
அதன் பின்னர் விமானத்தில் ஏறிய மணமக்கள் உள்ளே தங்களது விருந்தினர்களுடன் திருமணத்தை கொண்டாடினர்.

விமானத்தின் உட்புறத்தில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பர நட்சத்திர ஹோட்டலாக விமானம் மாறுபட்டிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
விமானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு வானத்தில் தங்களது காதலை உறுதி செய்தனர்.
இதனை வீடியோவாக எடுத்து "காற்றில் காதல் உள்ளது" என்ற தலைப்புடன் சாம் சுயி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த ஜோடி ஜூலை 12 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஃபுஜைரா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (FJR) புறப்பட்டதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.