விக்ரமின் அடுத்த படம் இதுதான்!
நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விக்ரமிடம் இயக்குநர் பிரேம் குமார் கதை சொன்னதாகவும் அது அவருக்குப் பிடித்ததால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இதனை வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
96, மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து 96 - 2 படத்தை இயக்க பிரேம் குமார் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போக, திரில்லர் கதையொன்றை எழுதினார். விக்ரம் இக்கதையில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: படை தலைவன் ஓடிடி தேதி!