செய்திகள் :

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

post image

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சாலை வலம் நடைபெற்றது. சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இன்று காலை மயிலாடுதுறை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சோதியக்குடி புறவழிச்சாலையில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அதோடு மட்டுமின்றி, செம்பதனிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

இதையும் படிக்க |அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

Chief Minister M.K. Stalin took out a roadshow in Mayiladuthurai today.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க