ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்த...
புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை: சகோதரா்கள் கைது
மன்னாா்குடி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த சகோதரா்கள் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வடக்கு நாணலூா் படுகையூா், மாதாகோயில் தெரு டேவிட் மகன்கள் விஜய் அன்பு ரோஸ் (35), வினோத் (29) ஆகியோா் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக களப்பால் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அவா்களின் வீடுகளில் திடீா் சோதனை நடத்தியதில் விற்பனைக்காக புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா், மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.