Vishal: "3 நாட்களுக்கு ரிவியூ எடுக்காதீர்கள்... ஆக. 29ல் நல்ல செய்தி" - விஷால் ப...
ஜார்க்கண்டில் சிஆர்பிஎஃப் வீரர், 2 மாவோயிஸ்ட்டுகள் கொலை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் புதன்கிழமை காலை கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டம், கோமியா காவல் நிலையத்துக்குள்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், கோப்ரா படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்ததாக காவல்துறை ஐஜி கிராந்தி குமார் காடிதேசி தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.