செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.02 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.74 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 18 காசுகள் சரிந்து ரூ.85.94ஆக நிறைவடைந்தது.

நேற்றைய அமர்வில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.76 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!

The rupee declined 18 paise against the US dollar to close at 85.94.

அமெரிக்காவில் ஜெனரிக் கண் மருந்தை அறிமுகப்படுத்திய லூபின்!

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப... மேலும் பார்க்க

நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப... மேலும் பார்க்க

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவு!

மும்பை: டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவறால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவடைந்தது.இருப்பினும், நடைபெற்று வரும் இந்தியா - ... மேலும் பார்க்க

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: முதலீட்டாளர்கள் ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் தொடர்ந்து வாங்கியதால் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்து, உயர்ந்தது முடிவடைந்தன. மேலும் சில்லறை பணவீக்கம் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சோதனை தயாரிப்பு நடக்கும் என்றும், அதன் பிறகு அடுத்த மாதம் மொத்த தயாரிப்பு த... மேலும் பார்க்க