புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்ற...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவு!
மும்பை: டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவறால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவடைந்தது.
இருப்பினும், நடைபெற்று வரும் இந்தியா - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முடிவு குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் ரூபாயின் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக குழு வாஷிங்டனில் உள்ளது. நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய நான்கு நாள் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நிறைவடையும்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.97 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.75 முதல் ரூ.85.97 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82ஆக நிறைவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.85.92 ஆக நிறைவு.
இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!