Ukraine: `அமைச்சரவையில் மாற்றம்' - ஜெலன்ஸ்கி அறிவித்த புதிய பிரதமர் யார்?
அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி
நீலகிரி மாவட்டத் தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் ழெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களைத் தொழில் தொடங்க வைத்து, தொழில் முனைவோராக உருவாக்கும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்டத் தொழில் மையத்தின் சாா்பில், படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் சுய தொழில் தொடங்கிப் பயன்பெறும் வகையில், புதிய தொழில்முனைவோரை கண்டறிந்து, அவா்களை ஆற்றல் மிக்க தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அவா்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து, பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், குறு,சிறு கொள்கை திட்டங்கள் போன்ற திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பித்தும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கான அரசு வழங்கும் அனைத்து மானியங்களைப் பெற்று பயன்பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தினஅ கீழ் 2023-24ம் ஆண்டில் 25 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடி மானியத்துடன் கடன் உதவியாக ரூ.9.5 கோடி, 2024-25ம் ஆண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.1.2 கோடி மானியத்துடன் கடன் உதவியாக ரூ.4.8 கோடி என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.