செய்திகள் :

Ukraine: `அமைச்சரவையில் மாற்றம்' - ஜெலன்ஸ்கி அறிவித்த புதிய பிரதமர் யார்?

post image

2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

புதிய பிரதமர் யார்?

கடந்த 14-ம் தேதி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை அறிவித்தார். புதிய பிரதமர் பெயரையும் பரிந்துரைத்தார்.

யூலியா ஸ்வைரிடென்கோ
யூலியா ஸ்வைரிடென்கோ

இந்த நிலையில், உக்ரைன் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக, பொருளாதார அமைச்சராக இருந்த யூலியா ஸ்வைரிடென்கோ பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.

டெனிஸ் ஷ்மிகல் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

புதிய பிரதமர் பதவி ஏற்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. ஜெலன்ஸ்கி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால், ஒப்புதல் கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் அரசில் ஏற்படும் முதல் பெரிய மாற்றம் இது.

யூலியா ஸ்வைரிடென்கோ, டெனிஸ் ஷ்மிகல்...

அமெரிக்கா உடன் உக்ரைன் போட்ட கனிம ஒப்பந்தத்தில் யூலியா ஸ்வைரிடென்கோவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

டெனிஸ் ஷ்மிகலை பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆக்கியதற்கு, அவரது அனுபவம் இந்தத் துறைக்கு தேவை என்று ஜெலன்ஸ்கி காரணம் கூறியுள்ளார்.

இந்த அமைச்சரவை மாற்றம் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தத்திற்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜயகாந்த் பிறந்த நாளில், அவர் பிறந்த ஊரில் தவெக-வின் மாநில மாநாடு! - பந்தக்கால் நடும் விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கான பந்தக்கால் விழா இன்று காலை சிறப்பாக நடந்தது.பந்தக்கால் நடும் விழாமத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!- அன்புமணி விமர்சனம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஸ்டாலினின் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியால்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பண மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக இரு வேறு வழக்குகளின் விசாரணை இன்று தொடங்... மேலும் பார்க்க

``கூட்டணிக்கு அதிமுக தலைமை, நான் தான் முதலமைச்சர்; உங்களுக்கு என்ன சந்தேகம்?'' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூலை 16) சிதம்பரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

PMK: வன்னியர் சங்கம் டு அரசியல் கட்சி வரை! - 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமகவின் கதை

1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத... மேலும் பார்க்க