செய்திகள் :

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!

post image

'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்கள், கோடிகளை சேர்க்க முடியும்.

அது எப்படி... அதற்கான 10 டிப்ஸ்களைப் பார்க்கலாம்...

சேமிப்பு
சேமிப்பு

1. எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அப்போது, நீங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியதாக இருக்காது.

2. சடன் லன்ச் பிளான்களை தவிருங்கள். ஒரு மாதத்திற்கு இவ்வளவு முறை தான் வெளியில் சாப்பிட வேண்டும் என்று எதாவது கணக்கு வைத்துகொள்ளுங்கள். அந்தக் கணக்கை தாண்டி வெளியில் உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு 'நோ... நோ'.

3. தினமும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை கணக்கு வையுங்கள். அப்போது தான், கொஞ்சம் செலவு கையை மீறினாலும், சட்டென நம்மை நாமே செலவு செய்வதில் இருந்து கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.

4. ஒரு நாளைக்கு இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒரு லிமிட்டை செட் செய்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒருவித கட்டுப்பாட்டை தரும்.

5. சமையல் பொருள்களை தனித்தனியாக வாங்குவதை விட, திட்டமிட்டு பல்க் ஆக வாங்கினால், காசு கொஞ்சம் சேமிக்கலாம்.

6. தேவையில்லாத போது, மின்சார சாதனங்களை அணைத்துவிடுங்கள்.

சேமிப்பு
சேமிப்பு

7. பெரும்பாலான பயணங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லலாம்.

8. ஆன்லைனில் ஒரு பொருளை பார்த்த உடன், ஆர்டர் போட்டுவிடாதீர்கள். கார்ட்டில் போட்டு கொஞ்சம் காலம் வைத்திருங்கள். இந்த இடைவெளியில், 'அந்தப் பொருள் உங்களுக்கு தேவையானதா... இல்லையா?' என்பது தெரிந்துவிடும்.

9. ஒரு நாளுக்கு ரூ.50 - 100 சேமிப்பாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ரூ.50 என்றாலும், ஒரு ஆண்டிற்கு ரூ.18,250 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

10. எதற்கெடுத்தாலும், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், கையில் இருந்து செலவு செய்யப் பாருங்கள். கையில் காசு இல்லாத சூழலில், கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், சலுகை கிடைக்கும் என்ற சூழலில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள்.

11. தேவையில்லாத சப்ஸ்கிரிப்ஷன்களை கேன்சல் செய்யுங்கள்.

12. தினமும் தூங்கப்போவதற்கு முன்பு 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த ஐந்து நிமிடங்களில், இன்று எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள், எது தேவையில்லாத செலவு என்று பாருங்கள். இதை வைத்து அடுத்த நாளை திட்டமிடுங்கள்.

'இதெல்லாம் செஞ்சா பணக்காரர் ஆகிடலாமா?' என்ற கேள்வி, உங்கள் மைண்ட் வாய்ஸ் ஆக எட்டிப்பார்க்கும்.

இவற்றை செய்வதால் மட்டும் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆகிவிட முடியாது. ஆனால், நீங்கள் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆக இதுவும் உதவும்.

நீங்க பிசினஸ் ஓனரா? சிறு குறு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்! - விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க!நீங்க ஒரு பிசினஸ் ஓனரா?சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா?உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா?உங்களின் பிசினஸ் லாபத்தை... மேலும் பார்க்க

LIC: இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. ஆர்.துரைசாமி

லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக திரு.ஆர்.துரைசாமி பொறுப்பேற்றிருக்கிறார்.LIC | எல்ஐசி இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் ... மேலும் பார்க்க

சென்னை ஊரப்பாக்கம், கௌரிவாக்கத்தில் தங்கமயிலின் 63 & 64வது கிளை திறப்பு!

தங்கமயிலின் 63 & 64வது கிளை சென்னை கௌரிவாக்கம் (gowriwakkam) ஊரப்பாக்கத்தில் (urapakkam) 06.07.2025 அன்று திறக்கப்பட்டது. கிளைகளை நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ், நிர்வாக இணை இயக்குனர்கள் பா ர... மேலும் பார்க்க

வெளிநாடு வாழ் இந்தியர்கள், 50 வயசுக்குள்ள ரிட்டையர் ஆவது எப்படி? - 'லாபம்' வழங்கும் வெபினார்!

ஹாய்! எப்படி இருக்கீங்க!"நிறைய பணம் வைத்திருப்பது முக்கியமல்ல. நாம் நினைத்தபடி சுதந்திரமாக வாழ்வதே முக்கியம்!" - யுவர் மணி ஆர் யுவர் லைஃப் புத்தகத்தில் இருந்துவாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இதயத்தோ... மேலும் பார்க்க

லாபம் தரும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி? - பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் நேரடி பயிற்சி

பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் வேண்டுமா?லாபம் தரும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?ஷேர் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர்ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனால... மேலும் பார்க்க

'சொந்த வீடு வாங்க, வீட்டுக் கடன் வாங்கலாமா... கூடாதா?' - நிபுணர் விளக்கம்

இது அனைவருக்கும் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலாக, 'நீங்கள் அதை எப்படி கையாள்கிறீர்கள்?' என்பதை பொறுத்தே, அது நல்லதாகவும், கெட்டதாகவும் அமையும் என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன். ... மேலும் பார்க்க