செய்திகள் :

தலைவன் தலைவி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

post image

நடிகர் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகியுள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வைரலானதுடன், தற்போதுவரை 1.29 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று விஜய்சேதுபதி முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் டிரைலர் நாளை(ஜூலை 17) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரி பாட்டர் நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை!

ஹாரி பாட்டர் திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸன், கடந்த 2024 ஆம் ஆ... மேலும் பார்க்க

விறுவிறுப்பான சூர்யா - 46 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி,... மேலும் பார்க்க

ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!

நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கும் பென்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜுக்கும் சென்னையில் நேற்று(ஜூலை 15) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமான மூத்த நடிகர் ... மேலும் பார்க்க

டிஎன்ஏ ஓடிடி தேதி!

நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது.குழந்த... மேலும் பார்க்க