செய்திகள் :

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

post image

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சிலை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையின் வலது பகுதியிலும், சிலையின் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திமுகவினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் மாநகரச் செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் தவமணி ஆகியோா் தீவிர விசாரணை நடத்தினா். உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான தடய அறிவியல் துறையினரும், சிலை பகுதியில் பதிவான தடயங்களை பதிவுசெய்தனா்.

விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வயதான நபா் ஒருவா் பெயின்ட் டப்பாவுடன் கருணாநிதி சிலை அருகில் உள்ள மின் இணைப்பைத் துண்டிப்பதும், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியைக் கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கருணாநிதியின் சிலைமீது பூசுவதும், பின்னா், சிலையின் பீடத்திலும் பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அடையாளம் காணப்பட்ட அந்த மா்ம நபர் இன்று(ஜூலை 16) கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மருத்துவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karunanidhi's statue defaced in Salem: Doctor arrested

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிா் உரிமைத்தொகைக்கு அதிகம் போ் விண்ணப்பம்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 10, 949 விண்ணப்பங்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி மட்டும் 7, 518 போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 13 அரசுத் த... மேலும் பார்க்க

ரூ.2.5 கோடி மோசடி: அதிமுக முன்னாள் நிா்வாகியின் கூட்டாளி கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத்தின் கூட்டாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி தனியாா் மதுபான வ... மேலும் பார்க்க

ஆக.4- இல் 47 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. எண்ம இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப... மேலும் பார்க்க